முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஆளுநர் ரவிக்கு எதிரான சிறு பொறிகள் பெருந்தீயாக மாறாது என்பதற்கு உத்தரவாதம் இல்லை- திமுகவின் முரசொலி எச்சரிக்கை

ஆளுநர் ரவிக்கு எதிரான சிறு பொறிகள் பெருந்தீயாக மாறாது என்பதற்கு உத்தரவாதம் இல்லை- திமுகவின் முரசொலி எச்சரிக்கை

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி

தேவையற்ற விவகாரங்களில் தலையிட்டு தாறுமாறாக பேசி, தமிழக மக்களின் உணர்வோடு ஆளுநர் ஆர்.என்.ரவி விளையாடத் தொடங்கியுள்ளார்- முரசொலி

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆளுநர் ரவிக்கு எதிராக தற்போது உருவாகி இருக்கும் சிறு பொறிகள், நாளை பெருந்தீயாக மாறாது என்பதற்கு உத்தரவாதம் தர இயலாது என்று முரசொலி எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆளுநர் ரவி தனது பதவிக்குரிய பொறுப்புணர்ந்து செயல்படுவதில் பல நேரங்களில் தடம்புரள்வதாகவும், தேவையற்ற விவகாரங்களில் தலையிட்டு தாறுமாறாக பேசி, தமிழக மக்களின் உணர்வோடு விளையாடத் தொடங்கி உள்ளதாகவும் முரசொலியில் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

அயல்நாடுகளுக்கான இந்திய தூதர்கள் ஆளுநரை சந்தித்தபோது தமிழ்நாட்டை பாராட்டியதாகவும், அப்போது அவர்களிடம் திராவிட மாடலை ஆளுநர் விமர்சித்ததாகவும், இணையதளங்களில் செய்தி கசிவதாக அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: புதுச்சேரி ஆட்சி நிர்வாகத்தில் ஆளுநர் தலையீடு இல்லை... முதலமைச்சர் ரங்கசாமி விளக்கம்

திருக்குறள் குறித்து ஆளுநர் ரவி கூறிய கருத்து அவருக்கு எதிராக பலரை போர்க்கொடி உயர்த்த வைத்துள்ளதாகவும்  இன்று  சிறு பொறிகளாக இருக்கும் எதிர்ப்பு நாளை பெருந்தீயாக மாறாது என்பதற்கு, யாரும் எந்த உத்தரவாதமும் தர இயலாது என்றும் இது எச்சரிக்கையல்ல; நிலைமை விளக்கம் என்றும் அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

top videos
    First published:

    Tags: RN Ravi, Tamil Nadu Governor