சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற 13 திமுக எம்.எல்.ஏ.க்கள் தலைமைச் செயலகத்தில் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.
இன்று காலை 11 மணிக்கு, சபாநாயகர் அறையில் சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் மூத்த தலைவர்கள் முன்னிலையில் இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
சபாநாயகர் தனபால் 13 சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
நடைபெற்று முடிந்த 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் ஒட்டபிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, திருவாரூர், தஞ்சாவூர், ஒசூர், ஆம்பூர், குடியாத்தம், பெரியகுளம், ஆண்டிபட்டி, பூந்தமல்லி, பெரம்பூர், திருப்போரூர் ஆகிய 13 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது.
வெற்றிபெற்ற திமுக உறுப்பினர்கள் பதவியேற்கச் சபாநாயகர் அனுமதியளித்ததை தொடர்ந்து இன்று காலை 11 மணிக்குப் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது.
தற்போது திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 88-ல் இருந்து 101 ஆக உயர்ந்துள்ளது. இதனைத் தவிர்த்துத் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் 8 உறுப்பினர்களும், இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி சார்பில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் என மொத்தமாகத் திமுக கூட்டணியின் எண்ணிக்கை 110 ஆக உள்ளது.
திமுக உறுப்பினர்கள் இன்று பதவியேற்றுள்ள நிலையில் நாளை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்க உள்ளனர்.
மேலும் பார்க்க:
Published by:Tamilarasu J
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.