கிராம நிர்வாக அலுவலரை வெற்றிலை, பாக்கு வைத்து அழைத்த திமுக எம்.எல்.ஏ!
டி.ஆர்.பி ராஜாவின் இந்த வித்தியாச அழைப்பு சமூக வலைதளங்களில் பேசுபொருளாக உள்ளது.

எம்.எல்.ஏ டி.ஆர்.பி ராஜா
- News18
- Last Updated: June 8, 2019, 10:59 AM IST
சாலை விரிவாக்கப் பணிகள் தொடர்பான ஆய்வுக்கு, கிராம நிர்வாக அலுவலர் வர மறுத்ததை அடுத்து, அவரை வெற்றிலை பாக்கு வைத்து மன்னார்குடி திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா அழைத்தார்.
திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேரையூர் கிராமத்தில், வடவாறு வாய்க்காலின் அகலத்தை குறைத்து, சாலை அமைப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா, கிராம நிர்வாக அலுவலரை தொடர்புகொண்டபோது அவர் அழைப்பை எடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, கிராம நிர்வாக அலுவலரை நேரடியாக சென்று வெற்றிலை மற்றும் பாக்கு பழங்களை வைத்து, ஆய்வு பணிகளுக்கு வருமாறு டி.ஆர்.பி.ராஜா அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து, கிராம நிர்வாக அலுவலர் இன்று காலை பத்து மணிக்கு வருவதாக உறுதி அளித்தார்.
டி.ஆர்.பி ராஜாவின் இந்த வித்தியாச அழைப்பு சமூக வலைதளங்களில் பேசுபொருளாக உள்ளது.
டி.ஆர்.பி ராஜாதிமுக எம்.பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர் பாலுவின், இரண்டாவது மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று #மன்னார்குடி யில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நீர்நிலையை ஆய்வு செய்ய சென்ற பொழுது ஆய்வுக்கு வர மறுத்த ஒரு vao வை நேரில் சென்று வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தேன் 😇
— T R B Rajaa (@TRBRajaa) June 7, 2019
இனிமேலும் அதிகாரிகள் ஆய்வுக்கு வர மறுத்தால் அவர்களையும் இதே முறையில் அழைக்கலாம் என்று முடிவெடுத்துள்ளேன்.🙏🏽 #திமுக pic.twitter.com/GAoz4Fdlb6