பள்ளிகளின் தரம் உயர்த்துதல் : பொதுமக்கள் பங்கீட்டில் விலக்கு வேண்டும் - தங்கம் தென்னரசு

பள்ளிகளின் தரம் உயர்த்துதல் : பொதுமக்கள் பங்கீட்டில் விலக்கு வேண்டும் - தங்கம் தென்னரசு
திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு
  • News18
  • Last Updated: February 17, 2020, 12:21 PM IST
  • Share this:
பள்ளிகளை தரம் உயர்த்துவதற்கு  தேவைப்படும் பொதுமக்களின் பங்கீட்டு தொகைக்கு  விலக்கு அளிக்கவேண்டும்  என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் வலியுறுத்தினார்.

நிதி நிலை அறிக்கை மீதான விவாதம் இன்று தொடங்கியது. கேள்வி நேரத்தின் போது பேசிய திமுக உறுப்பினர் பிச்சாண்டி, பள்ளிகள் தரம் உயர்த்தப்படாமல் இருப்பதால் வேறு பள்ளிகளுக்கு செல்லவேண்டிய நிலை உள்ளது. அதற்கு போதுமான டவுன் பஸ் வசதியும் இல்லை. எனவே பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் என்றார்.

இதையடுத்து பேசிய,  திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு, உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்துவதற்கு ரூபாய் 1 லட்சமும், மேல்நிலைபள்ளியாக உயர்த்துவதற்கு 2 லட்சமும் பொதுமக்கள் திரட்டிகொடுக்கும் நிலை உள்ளது.


ஆனால் எஸ்எஸ்ஏ போன்ற திட்டங்களுக்கு  மத்திய  அரசே நிதி அளித்து விடுகிறது. 34,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள பள்ளிக்கல்வித் துறைக்கு இந்த 2 லட்சம் பெறுவது அவசியமில்லை. எனவே பொதுமக்கள் பங்கீட்டு தொகையை அரசே வழங்கி விலக்கு அளிக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதற்கு பதில் அளித்த பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், மலைவாழ் கிராமப்புற பள்ளிகளுக்கு  பொதுமக்கள் பங்கீட்டு தொகையில் விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது .

அனைத்து பள்ளிகளுக்கும் பொதுமக்கள் பங்கீட்டு தொகையிலிருந்து விதி விலக்கு வேண்டும் என்ற உறுப்பினர் தெரிவித்த கோரிக்கை தொடர்பாக முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.  அதே போல பள்ளிகளை தரம் உயர்த்துவது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.Also see...
First published: February 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading