திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் இளைய மகன் கொரோனாவால் உயிரிழப்பு

தி.மு.க எம்.எல்.ஏ மா.சுப்ரமணியனின் மகன் அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் இளைய மகன் கொரோனாவால் உயிரிழப்பு
மா.சுப்ரமணியன் மற்றும் குடும்பத்தினர்
  • Share this:
சென்னை சைதாப்பேட்டை திமுக சட்டமன்ற உறுப்பினரும் தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவிக்கு கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இருவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்ட நிலையில், மா.சுப்பிரமணியனின் இளைய மகன் அன்பழகன் (34) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.

உயிரிழந்த அன்பழகன்



இந்தலையில் கடந்த 8 நாட்களுக்கு முன்பாக சென்னை கிங் இன்ஸ்டிடியூட்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு அன்பழகன் சிகிச்சை பலனின்றி காலமானார்.


மாற்றுத்திறனாளியான அன்பழகன் வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்லாத நிலையில் வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் மூலம் கொரோனோ தொற்று பாதிக்கப்பட்டது. அன்பழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது திமுகவினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
First published: October 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading