கருணாநிதி பிறந்தநாளை செம்மொழி தினமாக அறிவிக்கவேண்டும் - தி.மு.க எம்.எல்.ஏ கோரிக்கை

கருணாநிதி

கருணாநிதியின் பிறந்தநாளை செம்மொழி தினமாக அறிவிக்கவேண்டும் என்று தி.மு.க எம்.எல்.ஏ சுந்தர் கோரிக்கைவைத்துள்ளார்.

 • Share this:
  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவபடத்தை பேரவையில் திறக்க வேண்டும் என தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் கோரிக்கை விடுத்துள்ளார்

  ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் ஆளுநர் உரையின் சிறப்பம்சங்களை சுட்டிக்காட்டினார். கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை சீரமைக்க முதலமைச்சரின் பொருளாதார குழு அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை, மத்திய அரசின் அலுவல் மொழிகளில் ஒன்றாக தமிழ் மொழியை அறிவிப்பதற்கு தேவையான நடவடிக்கை, கொரோனா தடுப்பு பணியில் தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கைகள் குறித்தும் உறுப்பினர் சுந்தர் விரிவாக பேசினார். only a life lived for others is a life worthwhile என்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கருத்துப்படி அடுத்தவர்களுக்காகவே வாழ்பவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் எனவும் புகழாரம் சூட்டினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மேலும் மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் திருவுருவபடத்தை பேரவையில் திறக்க வேண்டும் எனவும் கருணாநிதியின் பிறந்த தினமான ஜூன் 3 ஆம் தேதியை செம்மொழி தமிழ் தினமாக அறிவிக்க வேண்டும் எனவும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்தார்
  Published by:Karthick S
  First published: