• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஓசூர் எம்.எல்.ஏ மகன் சாலை விபத்தில் மரணம் - மு.க.ஸ்டாலின் இரங்கல்

ஓசூர் எம்.எல்.ஏ மகன் சாலை விபத்தில் மரணம் - மு.க.ஸ்டாலின் இரங்கல்

ஓசூர் எம்.எல்.ஏ மகன் சாலை விபத்தில் மரணம்

ஓசூர் எம்.எல்.ஏ மகன் சாலை விபத்தில் மரணம்

ஓசூர் எம்.எல்.ஏ பிரகாஷின் மகன் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஓசூர் எம்எல்ஏவுமான பிரகாஷ் அவர்களின் மகன் கருணா சாகர்(24). இவருடன் ஆடி காரில்  6 பேர் பயணித்துள்ளனர். கர்நாடக மாநிலம் கோரமங்களா பகுதியில் ஏற்ப்பட்ட கோர சாலை விபத்தில் எம்எல்ஏ மகன் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.

    சாலை தடுப்பில் மோதிய கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள கட்டடத்தின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணித்த மூன்று பெண்கள் உள்பட,7  பேரும் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக  கர்நாடாக மாநிலம் ஆடுகோடி போலிசார் விசாரனை செய்து வருகின்றனர்.

    இந்த கோர விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலங்கள் பெங்களூர் செய்ன்ட் ஜான்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து காரணமாக காரை அதிவேகமாக இயக்கியது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    Also Read : ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.-க்கள் கைது

    இந்நிலையில் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் மகன் உயிரிழப்பிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

    ஓசூர் சட்டப்பேரவை உறுப்பினர் பிரகாஷ் அவர்களின் மகன் கருணாசாகர் பெங்களூரு அருகே நடந்த கோரமான சாலைவிபத்தில் சிக்கி உயிரிழந்தது அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

    கோர விபத்துக்கு தன் அன்பு மகனை பறிகொடுத்திருக்கும் கழகத்தின் சட்டமன்ற உறுப்பின்ர் பிரகாஷ் அவர்களுக்கு எப்படி ஆறுதல் கூறுவது எனத் தெரியவில்லை.

    அன்பு மகனை இழந்து தவிக்கும் அவருக்கும், அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: