“சவால் விட்டீங்களே.. எப்போ ராஜினாமா செய்யுறீங்க?” விஜய பாஸ்கருக்கு செந்தில் பாலாஜி கேள்வி

விஜய பாஸ்கர் ராஜிமானா செய்தால் கரூக்கு இடைத்தேர்தல் வரும், அப்போது யாரை வேண்டுமானாலும் நிறுத்துங்கள், திமுக வெற்றி பெறும் என்றும் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

“சவால் விட்டீங்களே.. எப்போ ராஜினாமா செய்யுறீங்க?” விஜய பாஸ்கருக்கு செந்தில் பாலாஜி கேள்வி
செந்தில் பாலாஜி | விஜய பாஸ்கர்
  • News18
  • Last Updated: May 24, 2019, 10:52 AM IST
  • Share this:
செந்தில் பாலாஜி வெற்றி பெற்றால் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் பேசிருந்த நிலையில், தற்போது செந்தில் பாலாஜி விஜய பாஸ்கரிடம் கேள்வி எழுப்பினார்.

அமமுகவில் இருந்து திடீரென விலகி திமுகவில் இணைந்த முன்னாள் அதிமுக அமைச்சர் செந்தில் பாலாஜி அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக செந்தில் பாலாஜியை விமர்சித்த, கரூர் எம்.எல்.ஏ.வும் போக்குவரத்துத்துறை அமைச்சருமான விஜய பாஸ்கர், “செந்தில் பாலாகி அரவக்குறிச்சியில் நின்றாலும் சரி, கரூர் மக்களவை தொகுதியில் நின்றாலும் சரி, அவர் டெபாசிட் பெற்றுவிட்டால் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று கட்சி கூட்டம் ஒன்றில் பேசியிருந்தார்.

இந்நிலையில், தற்போது அரவக்குறிச்சியில் வெற்றி பெற்றுள்ள செந்தில் பாலாஜி, எப்போது ராஜினாமா செய்வீர்கள் என்று விஜயபாஸ்கருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

விஜய பாஸ்கர் ராஜிமானா செய்தால் கரூக்கு இடைத்தேர்தல் வரும், அப்போது யாரை வேண்டுமானாலும் நிறுத்துங்கள், திமுக வெற்றி பெறும் என்றும் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

First published: May 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்