Home /News /tamil-nadu /

தி.மு.க எம்.எல்.ஏ செந்தில் பாலாஜிக்கு கொரோனா பாதிப்பு

தி.மு.க எம்.எல்.ஏ செந்தில் பாலாஜிக்கு கொரோனா பாதிப்பு

திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி

திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி

கரூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ செந்தில் பாலாஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்துவருகிறது. பொதுமக்களைக் கடந்து மருத்துவர்கள், காவல்துறையினர், செவிலியர்கள், துப்புரப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். மேலும், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

தமிழகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, மின்சாரத்துறை தங்கமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கபில் ஆகிய நான்கு அமைச்சர்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளாகினர். தமிழகத்தில் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், இன்று கரூர் தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனையடுத்து, அவர் திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Published by:Karthick S
First published:

Tags: CoronaVirus, Senthil Balaji

அடுத்த செய்தி