ஆடிக்காற்றில் அம்மாவின் ஆட்சி பறந்து போய் விடும் - திமுக எம்.எல்.ஏ. பூங்கோதை ஆலடி அருணா

அமைச்சர் ஜெயக்குமார், அம்மிக்கு பதிலாக ஏற்கனவே மிக்ஸி கொடுத்துவிட்டார்கள் என்று நகைசுவையாக கூறினார்.

ஆடிக்காற்றில் அம்மாவின் ஆட்சி பறந்து போய் விடும் - திமுக எம்.எல்.ஏ. பூங்கோதை ஆலடி அருணா
பூங்கோதை ஆலடி அருணா
  • News18
  • Last Updated: July 16, 2019, 2:24 PM IST
  • Share this:
ஆடிக்காற்றில் அம்மி பறப்பதைப் போல், அம்மாவின் ஆட்சியும் பறந்து போய் விடும் என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா கூறியுள்ளார்.

மானியகோரிக்கை விவாத்தில் பேசிய திமுக உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா, இனிப்பு பொருட்களில் கலோரிகள், சர்க்கரயின் அளவு போன்ற பல்வேறு அம்சங்களும் எச்சரிக்கை வாசகங்களும் இடம் பெற செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

அதற்கு பதில் அளித்த முதலமைச்சர், அது போன்ற வாசகங்கள் இடம் பெற்றால், யாரும் ஹோட்டல்களுக்கு சென்று உணவருந்த மாட்டார்கள் என்றும், அதை எல்லாரும் கேட்க வேண்டும். இதை அனைவரும் ஏற்றுக்கொண்டால் உங்கள் ஆலோசனையை அரசு பரிசீலிக்கும் என்று தெரிவித்தார்.


அதனைத் தொடர்ந்து பேசிய பூங்கோதை ஆலடி அருணா, ஆடிக்காற்றில் அம்மி பறப்பதைப் போல், அம்மாவின் ஆட்சியும் பறந்து போய் விடும் என்றார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், ஆடிக் காற்றும் அடிக்காது. அம்மியும் பறக்காது. அம்மாவின் ஆட்சி எப்போதும் அகலாது என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், அம்மிக்கு பதிலாக ஏற்கனவே மிக்ஸி கொடுத்துவிட்டார்கள். பழைய பழமொழி இப்போது பொருந்தாது. எப்போதும் அம்மாவின் ஆட்சி தான். மம்மி ஆட்சிதான் என நகைச்சுவையாக தெரிவித்தார்.மேலும் படிக்க... மு.க.ஸ்டாலினையும், சூர்யாவையும் விமர்சிக்கும் தமிழிசை செளந்தரராஜன்

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading