முகப்பு /செய்தி /தமிழ்நாடு / DMK MLA Meeting | அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம்

DMK MLA Meeting | அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம்

அண்ணா அறிவாலயம்

அண்ணா அறிவாலயம்

புதிதாக தேர்வுசெய்யப்பட்ட திமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில், சட்டப்பேரவை கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வுசெய்யப்படுகிறார்.

  • Last Updated :

தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவையான நிலையில், 126 இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து முதலமைச்சர் பொறுப்பை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்துள்ளார். சேலத்தில் இருந்து தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு எடப்பாடி பழனிசாமி அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுசெயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் திமுக சட்டமன்ற கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட உள்ளார்.

இதையடுத்து, முதலமைச்சராக வரும் 7-ம் தேதி மு.க.ஸ்டாலின் பதவியேற்க உள்ளார். கொரோனா பரவல் காரணமாக ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.

மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமிக்கு டிவிட்டரில் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ள ஸ்டாலின், மிகச் சிறந்த தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும், ஒத்துழைப்பும் தேவை என்றும் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம், அதனை காப்போம் என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தேமுதிக பொதுசெயலாளர் விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்கள் ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறியுள்ளனர்.

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஒரு எடுத்தக்காட்டாய் திகழ வாழ்த்துக்கள் எனப் பதிவிட்டுள்ளார்.

இதற்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், தாங்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிறைவேற்றிடும் வகையில் புதிய அரசு செயல்படும்” என தெரிவித்துள்ளார்.

First published:

Tags: DMK, MK Stalin