சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசின் சார்பில் உணவு வழங்கியதில் முறைகேடு- திமுக எம்.எல்.ஏ., மா.சுப்ரமணியன் குற்றச்சாட்டு!

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசின் சார்பில் உணவு வழங்கியதில் முறைகேடு- திமுக எம்.எல்.ஏ., மா.சுப்ரமணியன் குற்றச்சாட்டு!

திமுக சட்டமன்ற உறுப்பிர் மா.சுப்பிரமணியன்

2G விவகாரத்தில் ஆ.ராசவை கிளைக்கழக செயலாளராக இருக்க கூட தகுதியில்லாதவர் என்று தமிழக முதல்வர் விமர்சித்துள்ளார். தமிழக முதல்வர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இருக்ககூட தகுதியில்லாதவர் என்றும் மா.சுப்பிரமணியம் விமர்சித்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
அரசின் சார்பில் சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட 26 லட்சம் மக்களுக்கு உணவு வழங்கியதில் 312 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக திமுக சட்டமன்ற உறுப்பிர் மா.சுப்பிரமணியன் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஏற்கனவே அரசின் சார்பில் மக்களுக்கு முகக்கவசம் வாங்கியதில் முறைகேடு நடைபெற்ற நிலையில் தற்போது உணவு விநியோகம் செய்வதில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டினார்.

அரசு சார்பில் வழங்கப்படும் உணவை அதிமுகவினரை வைத்து வழங்கிவருவது விதிமுறைகளை மீறிய நடவடிக்கை என்றும் இதன் மூலம் மக்களுக்கு முழுவதுமாக உணவு விநியோகம் செய்யப்படவில்லை என்று தெரிவித்த அவர் உணவு வழங்கியதில் 312 கோடி ரூபாய் முறைகேடு நடந்து இருப்பதாக தெரிவித்தார்.

Also read... மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த 4 அவதூறு வழக்குகளை ரத்து செய்தது நீதிமன்றம்சென்னையில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் மாநகராட்சி எல்லையில் உள்ள 6 சுங்கச்சாவடிகளில் கட்டண கொள்ளை நடப்பதாக தெரிவித்த அவர் இதனை கண்டித்து திமுக சார்பில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அக்கறை பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.

மேலும், 2G விவகாரத்தில் ஆ.ராசவை கிளைக்கழக செயலாளராக இருக்க கூட தகுதியில்லாதவர் என்று தமிழக முதலமைச்சர் விமர்சித்துள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இருக்ககூட தகுதியில்லாதவர் என்றும் மா.சுப்பிரமணியம் விமர்சித்தார்.
Published by:Vinothini Aandisamy
First published: