துப்பாக்கிச்சூடு விவகாரம் : திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

நில தகராறில் ரியல் எஸ்டேட் அதிபரை துப்பாக்கியால் சுட்டதாக திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூடு விவகாரம் : திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • Share this:
சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் குமாருக்கு சொந்தமாக திருப்போரூர் அடுத்த செங்காடு பகுதியில் உள்ள இடத்தில் திமுக எம்எல்ஏ இதயவர்மன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பள்ளம் தோண்டியதுடன்,

அவரை நிலத்துக்குள் அனுமதிக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. அது தொடர்பாக திருப்போரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு காரில் திரும்பிச் செல்லும் வழியில் குமார் தரப்பினர் மீது இதயவர்மன் உட்பட மூன்று பேர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில், குமாரின் உதவியாளர் இமயம் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த மோதல் சம்பவம் தொடர்பாக இருதரப்பினரும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதனடிப்படையில், திமுக எம்.எல்.ஏ இதயவர்மன், அவரது தந்தை லட்சுமிபதி உட்பட 10 பேர் மீதும், குமார் தரப்பினர் 50க்கும் மேற்பட்டோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


மேலும், இதயவர்மனிடம் இருந்து நாட்டு துப்பாக்கி மற்றும் கைதுப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள எம்.எல்.ஏ இதயவர்மன் விரைவில் கைது செய்யப்படுவார் என்று எஸ்.பி கண்ணன் தெரிவித்தார்.
First published: July 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading