பழைய 500 ரூபாய் நோட்டுகளுடன் தவித்த மூதாட்டி: ரூ.12,000 கொடுத்து உதவிய தி.மு.க எம்.எல்.ஏ

பழைய 500 ரூபாய் நோட்டுகளுடன் தவித்த மூதாட்டி: ரூ.12,000 கொடுத்து உதவிய தி.மு.க எம்.எல்.ஏ
பாட்டிக்கு உதவிய எம்.எல்.ஏ
  • News18
  • Last Updated: January 14, 2020, 8:29 PM IST
  • Share this:
வேலூர் மாவட்டத்தில் பழைய 500 ரூபாய் நோட்டுகளுடன் தவித்த பாட்டிக்கு 12,000 ரூபாய் கொடுத்து தி.மு.க எம்.எல்.ஏ நந்தகுமார் உதவி செய்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு 2016-ம் ஆண்டு அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500, 1000 நோட்டுகளை தடை செய்தது. ஆனால், அந்த விவரம் தெரியாமல் இன்று வரை சில மூதாட்டிகள் பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை வைத்துள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் திருப்பூரில் இரண்டு பாட்டிகள் பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட நோட்டுகளின் மதிப்பில் 60,000 ஆயிரம் ரூபாய் வரை வைத்திருந்தார். அவருக்கு தன்னார்வலர்கள் ரூபாய் கொடுத்து உதவி செய்தனர். இந்தநிலையில், வேலூர் மாவட்டம் லவன்பேட்டை சூளைமேடு பகுதியை சேர்ந்த மூதாட்டி புவனேஸ்வரியும் பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ரூ.500 நோட்டுகளை 12,000 ரூபாய் மதிப்புக்கு வைத்திருந்தது தெரியவந்துள்ளது.


அவருக்கு மாவட்ட நிர்வாகம் உதவி செய்ய மறுத்துவிட்ட நிலையில், அணைக்கட்டு எம்.எல்.ஏ-வும் தி.மு.க மாவட்ட செயலாளருமான நந்தகுமார் மூதாட்டியை நேரில் வரவழைத்து ரூ.12,000 கொடுத்து உதவிசெய்துள்ளார். மூதாட்டிக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை அளிக்கவும் பரிந்துரைத்துள்ளார்.

Also see:


 
First published: January 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading