Home /News /tamil-nadu /

ஸ்டாலினுடன் பேசிய மாற்றுத்திறனாளி குடும்பம்... ஒரு மணி நேரத்தில் வீட்டிற்குச் சென்று உதவிய தி.மு.க. எம்.எல்.ஏ..!

ஸ்டாலினுடன் பேசிய மாற்றுத்திறனாளி குடும்பம்... ஒரு மணி நேரத்தில் வீட்டிற்குச் சென்று உதவிய தி.மு.க. எம்.எல்.ஏ..!

News 18

News 18

ஒரு மணி நேரத்தில் மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு மு க ஸ்டாலின் மூலம் கீழ்வேளூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் உதவி செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  • News18
  • Last Updated :
நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்துள்ள கடம்பங்குடி கிராமத்தை சேர்ந்தவர் விவசாய கூலித் தொழிலாளியான கலையரசி, கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி கணவர் சுந்தரமூர்த்தியுடன் வாழ்ந்து வருகிறார்.

இவர்களுக்கு 11 வயது ராகுல், 15 வயது நிரம்பிய சுபஸ்ரீ மற்றும் மனவளர்ச்சி குன்றிய 12 வயது சிறுவன் கபிலன் ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக, 100 நாள் வேலை இழந்த கலையரசியின் குடும்பம் உணவுக்கு வழியின்றி வறுமையில் வாடியுள்ளது.

இந்நிலையில் சமூக வலைதளம் மூலம் உதவும் 'ஒன்றிணைவோம் வா' என்ற திட்டத்தை திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்கி அதனை செயல்படுத்தி வருகிறார். இந்த எண்ணிற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட கலையரசி, ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் தங்களின் குடும்பத்தின் கஷ்ட நிலை குறித்து மு க ஸ்டாலினிடம் பேசியுள்ளார்.

இதையடுத்து மனவளர்ச்சி குன்றியுள்ள அந்த குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்யுமாறு கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் மதிவாணனிடம், மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து இன்று ஒரு மணி நேரத்திற்குள் நாகை மாவட்டம் கடம்பங்குடி கிராமத்திற்கு சென்ற கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் மதிவாணன், கலையரசியின் குடும்பத்திற்கு தேவையான அரிசி காய்கறி மற்றும் மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அவர்களிடம் வழங்கினார்.

பின்னர் கலையரசியின் கணவர் சுந்தரமூர்த்தியின் கண் சிகிச்சைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து அந்த செலவினையும் சட்டமன்ற உறுப்பினர் மதிவாணன் செய்து தருவதாக அவர்களிடம் உறுதி கூறினார். ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின் மூலம் ஒரு மணி நேரத்தில் மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு மு க ஸ்டாலின் மூலம் கீழ்வேளூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் உதவி செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.








சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Published by:Sankar
First published:

Tags: Lockdown, Nagai

அடுத்த செய்தி