பணப்பட்டுவாடா புகார்; திமுக எம்.எல்.ஏ சிறைப்பிடிப்பு! நாங்குநேரியில் பரபரப்பு

பணப்பட்டுவாடா புகார்; திமுக எம்.எல்.ஏ சிறைப்பிடிப்பு! நாங்குநேரியில் பரபரப்பு
  • Share this:
நாங்குநேரி தொகுதியில், ஓட்டுக்கு பணம் கொடுக்க வந்ததாக, திமுக எம்.எல்.ஏ. உள்பட ஐந்து பேரை பொதுமக்கள் சிறைபிடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 21-ம் தேதி நடைபெறும் நிலையில், தேர்தல் பரப்புரை பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில் நாங்குநேரியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ரூபி மனோகரனுக்காக, அத்தொகுதிக்குட்பட்ட அம்பலம் கிராமத்தில், திமுகவினர் பண விநியோகம் செய்ததாக கூறப்படுகிறது.


பெரியகுளம் தி.மு.க எம்.எல்.ஏ சரவணகுமார் உள்பட ஐந்து பேர், பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள், அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, எம்.எல்.ஏ சரவணகுமார் உள்பட ஐந்து பேரையும் சிறைபிடித்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து, கட்டுக்கட்டாக இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்து, தேர்தல் ஆணையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

Also Watch : கனிமொழியை எண்ணி ஸ்டாலின் பயப்படுகிறாரா? - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
First published: October 17, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்