ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

திமுக தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் மனு தாக்கல்..!

திமுக தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் மனு தாக்கல்..!

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

MKStalin : இரண்டாவது முறையாக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தலைவராக தேர்வாக உள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai [Madras], India

  திமுக தலைவர் பதவிக்கு போட்டியிடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

  கட்சியின் கிளை அமைப்பு தொடங்கி மாவட்ட செயலாளர் வரையிலான பதவிகளுக்கான திமுகவின் 15-வது உட்கட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக கட்சியின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை மறுதினம், அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் நடைபெற உள்ளது.

  இதற்கான வேட்புமனு தாக்கல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று காலை 10 மணி தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. காலை முதலே அமைச்சர்கள் பலரும் ஸ்டாலின் பெயரின் தலைவர் பதவிக்கு மனுதாக்கல் செய்தனர். இந்நிலையில் நண்பகல் 12.15 மணிக்கு அண்ணா அறிவாலயம் வந்த மு.க.ஸ்டாலின், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் தனது வேட்புமனுவை வழங்கினார்.

  Also Read: திமுக துணை பொதுச்செயலாளர் ஆகிறாரா கனிமொழி? - பொதுக்குழுவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

  இதனைத் தொடர்ந்து பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவும் மனுதாக்கல் செய்தனர். அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, ஏ.வ.வேலு, கனிமொழி எம்.பி. உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. ஆகியோரும் இந்த நிகழ்வின் போது உடனிருந்தனர். திமுக தலைவராக 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 28 ம் தேதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். தற்போது இரண்டாவது முறையாக அவர் போட்டியின்றி தலைவராக தேர்வாக உள்ளார்.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: DMK, MK Stalin, Tamil News