சுயமரியாதை மற்றும் தன்மானத்தை தனக்கு கற்றுக்கொடுத்தவர் க.அன்பழகன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகாழாரம் சூட்டியுள்ளார். திமுக முன்னாள் பொதுச்செயலாளரான க.அன்பழகனின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அயனாவரத்தில் உள்ள செளந்திரபாண்டியன் மேல்நிலைப்பள்ளியில் அவரது படத்திற்கு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர், 100 கல்லூரி மாணவர்களுக்கு தலா 5,000 ரூபாய் ஊக்கத்தொகை, நோட்டு, பேனா உள்ளிட்ட கல்வி உபகரணங்களையும் ஸ்டாலின் வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், மனதில் தோன்றியதை வெளிப்படையாகப் பேசும் பழக்கம் கொண்டவர் க.அன்பழகன் என பெருமிதம் தெரிவித்தார். மேலும், பேராசிரியப் பெருந்தகைக்கு விருப்பமான கல்விக்கு உதவும் நாளாகவே அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது நிறைவளித்ததாக தெரிவித்தார்.