எவ்வளவு பணம் கொடுத்தாலும் ஆட்சியை அப்புறப்படுத்த மக்கள் தயாராக உள்ளனர் - மு.க ஸ்டாலின்

வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக எடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

news18
Updated: April 17, 2019, 10:41 AM IST
எவ்வளவு பணம் கொடுத்தாலும் ஆட்சியை அப்புறப்படுத்த மக்கள் தயாராக உள்ளனர் - மு.க ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்
news18
Updated: April 17, 2019, 10:41 AM IST
எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தவே வருமான வரித்துறை சோதனை நடப்பதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி வீட்டில் நேற்றிரவு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். ஆனால், சோதனையில் பணம் உள்ளிட்ட எதுவும் சிக்கவில்லை.

இந்நிலையில், சென்னை கோபாலபுரத்தில் இன்று காலை பேட்டியளித்த திமுக தலைவர் மு.க ஸ்டாலின், எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தவே வருமான வரித்துறை சோதனை நடப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், எவ்வளவு பணம் கொடுத்தாலும் ஆட்சியை மக்கள் அப்புறப்படுத்த தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக எடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

நியாயமாக பார்த்தால் அதிமுகவினர் பணம் கொடுத்துள்ளதால் தேனி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Also See...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

 
First published: April 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...