திமுக எம்.பி கவுதம சிகாமணியின் சொத்துக்கள் முடக்கம்

திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான கவுதம சிகாமணி, ஐக்கிய அரபு அமீரகத்தில் முதலீடு செய்துள்ளார்.

திமுக எம்.பி கவுதம சிகாமணியின் சொத்துக்கள் முடக்கம்
திமுக எம்.பி கவுதம சிகாமணி
  • Share this:
ரிசர்வ் வங்கியின் ஒப்புதலின்றி வெளிநாட்டில் முதலீடு செய்து வருவாய் ஈட்டியதாக தொடரப்பட்ட வழக்கில், திமுக எம்.பி. கவுதம சிகாமணியின் 8 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான கவுதம சிகாமணி, ஐக்கிய அரபு அமீரகத்தில் முதலீடு செய்துள்ளார். இதன் மூலம் ஈட்டப்பட்ட 7 கோடி ரூபாயை மறைத்தது, அமலாக்கத்துறை மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, கவுதம சிகாமணிக்கு சொந்தமாக உள்ள அசையா சொத்துகள், வணிக வளாகங்கள் மற்றும் வங்கி கணக்கில் உள்ள பணம் உட்பட 8 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.


அன்னிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published: October 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading