90 சதவீத தமிழக அமைச்சர்களுக்கு ஆங்கிலம் தெரியாது , விமானம் ஏற கூட தெரியாது ஆங்கிலம் தெரியாததால் டெல்லி சென்று தமிழகத்திற்கு ஒரு பைசா கூட நிதி கூட இவர்களால் பெற்று வர முடியாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்து பேசினார். மேலும் வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
சென்னையில் மயிலாப்பூரில் நடைபெற்ற திராவிட மாயை என்கிற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு அவர் நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், திராவிடம் என்பது குழப்பம் நிறைந்த ஒன்று. திமுக தொடங்கப்பட்டதே குழப்பத்தில் தான். தேசிய குற்ற ஆவண புள்ளிவிவரங்களின்படி தமிழகத்தில் தீண்டாமையில் திருவாரூர் மாவட்டம் தான் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் பதிவான 600 தீண்டாமை வழக்குகளில் 156 திருவாரூரில் பதிவானவை.
திமுகவை வீழ்த்துவது எளிது. திமுகவில் 260 நபர்கள் மேல்மட்டத்தில் உள்ளனர். அவர்களை வீழ்த்தி விட்டால் திமுகவை வீழ்த்துவது பெரிய காரியமில்லை. திமுகவும் பெரிய வெங்காயமும் ஒன்று அதனை உரிக்க உரிக்க அதில் ஒன்றும் இருக்காது.
திமுக அமைச்சர்கள் சம்பந்தமில்லாமல் பேசுகிறார்கள், கோடைகாலத்தில் மழை வந்தாலும் அதற்கு காரணம் திராவிட மாடல் என்று கூறுவார்கள்” இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.