• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொன்ன திமுக அமைச்சர்!

விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொன்ன திமுக அமைச்சர்!

விநாயகர் சிலை

விநாயகர் சிலை

திமுகவின் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்

  • Share this:
    நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதற்கிடையில் விழாவைக் கொண்டாடப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கும் சிலைகள் வைப்பதற்கும் அனுமதியில்லை. அதேபோல் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லவும், சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதி இல்லை.

    மேலும் தனி நபர்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், அருகில் உள்ள நீர்நிலைகளில் தனிநபராக சென்று சிலையை கரைப்பதற்கு அனுமதிக்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசின் வழிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

    தமிழக அரசின் இந்த கட்டுப்பாடு உத்தரவுக்கு பாஜக மற்றும் இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும்,
    பிற மதங்களைச் சேர்ந்த பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், விநாயகர் சதுர்த்தி, தீபாவளி போன்ற இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பதில்லை என்றும் பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    இதன் காரணமாக பாஜகவினர் முதல்வர் ஸ்டாலினுக்கு 10 லட்சம் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கடிதங்களை அனுப்ப வேண்டும் என மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, பிற மதங்களைச் சேர்ந்த பண்டிகைகளுக்கும், விழாக்களுக்கும் அனுமதி அளித்துவிட்டு, இந்து மத விழாக்களுக்கு மட்டும் தடை விதிப்பதாக கூறியும், இந்து மத பண்டிகைகளுக்கு முதல்வர் வாழ்த்து தெரிவிக்க வலியுறுத்தியும், தமிழக பாஜக சார்பில் முதல்வருக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடந்து வருகிறது.

    Also read: விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு தடைவிதிக்கவில்லை - முதல்வர் மு.க.ஸ்டாலின்

    இதுபோன்ற, சர்ச்சைகளுக்கு மத்தியில், திமுகவின் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.



    இதுதொடர்பாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பெரியார், அண்ணா, கலைஞர் மற்றும் மு.க.ஸ்டாலினின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. மேலும், அந்த புகைப்படத்தில் விநாயகர் படத்துடன், விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் என்ற வாழ்த்தும் இடம்பெற்றுள்ளது.

    முன்னதாக, கடந்த வருட விநாயகர் சதுர்த்தியின் போது, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், விநாயகர் சிலையை ஒருவர் கையில் வைத்திருப்பது போன்ற படத்தை வெளியிட்டிருந்தார். எனினும் அதில், எந்த வாழ்த்தும் தெரிவிக்காமல் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: