முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பாவம் விடுங்க சார் கொறடா பற்றி பேசட்டும் - துரைமுருகன் பேச்சால் அவையில் சிரிப்பலை

பாவம் விடுங்க சார் கொறடா பற்றி பேசட்டும் - துரைமுருகன் பேச்சால் அவையில் சிரிப்பலை

துரைமுருகன்

துரைமுருகன்

DMK Duraimurugan: இப்போ தான் ஒருத்தர் கொறடா பற்றி இவர் மட்டும் தான் பேசுறாரு பேசட்டும் விடுங்க சார்.. துரைமுருகன் பேச்சால் சிரிப்பலை

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுணன் மருதமலை சுப்ரமணிய சாமி கோயிலுக்கு கம்பிவட ஊர்தி வசதி (Rope Car) செய்து தர அரசு முன்வருமா என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மருதமலை சுவாமி திருக்கோயிலுக்கு கம்பிவட ஊர்தி அமைக்க வேண்டும் என அந்த பகுதி மக்களிடம் இருக்கும் கோரிக்கை. ஆனால் பொதுப்பணித்துறை எடுத்த மண் பரிசோதனையில் அதற்கான சாத்திய கூறுகள் இல்லை என கூறப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Also Read: மருதமலை முருகன் கோயிலில் ரோப் கார் வசதி கோரிய எம்எல்ஏ.. அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்

மீண்டும் சட்டபேரவை உறுப்பினர் அர்ச்சுணன் பேசும் போது, எடப்பாடி தொடங்கி ஒ.பி.எஸ், எஸ்.பி.வேலுமணி வரை பாராட்டி பேசி வந்தார். அப்போது குறுக்கீடு செய்த சபாநாயகர் கேள்வி நேரத்தில் கேள்வியை மட்டும் கேளுங்கள். நிதிநிலை அறிக்கையின் போது இப்படி பேசுங்க என்றார்.

அமைச்சர் துரைமுருகன் குறுக்கீடு செய்து எல்லாரும் பேசும் போது தலைவர், துணை தலைவர் பற்றி பேசுனாங்க. இப்போ தான் ஒருத்தர் கொறடா ( எஸ்.பி.வேலுமணி) பற்றி பேசுகிறார். பாவம் விடுங்க சார் கொறடா பற்றி பேசட்டும் என துரைமுருகன் கூற அவையில் சிரிப்பு அலை எழுந்தது.

First published:

Tags: Duraimurugan, Tamilnadu, TN Assembly