''தி.மு.க பிரமுகர்கள் மிரட்டுகின்றனர்'' - கரூர் ஆட்சியர் குற்றச்சாட்டு

செந்தில் என்ற திமுக வழக்கறிஞர் தலைமையில் 50 பேர் ஆட்சியர் அன்பழகன் வீட்டுக்கு அத்துமீறி சென்றதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

Vijay R | news18
Updated: April 16, 2019, 11:43 PM IST
''தி.மு.க பிரமுகர்கள் மிரட்டுகின்றனர்'' -  கரூர் ஆட்சியர் குற்றச்சாட்டு
அன்பழகன்- கரூர் மாவட்ட ஆட்சியர்
Vijay R | news18
Updated: April 16, 2019, 11:43 PM IST
தி.மு.க பிரமுகர்கள் தம்மை மிரட்டுவதாக கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  "முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் தம்மை நள்ளிரவில் மிரட்டியதாக கூறினார்.

இறுதிக்கட்ட பிரசாரத்தில் அ.தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்றிரவு செந்தில் என்ற தி.மு.க வழக்கறிஞர் தலைமையில் 50 பேர் ஆட்சியர் அன்பழகன் வீட்டுக்கு அத்துமீறி சென்றதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.

Also Watch

First published: April 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...