விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட மரக்காணம் ஒன்றியத்தில் 26 ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளனர்.இவர்களுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் திமுக 17 இடங்கள்,கூட்டணி கட்சியான விசிக ஒன்று ,அதிமுக-3, பாமக-2, சுயேட்சை-3 என இடங்களை பிடித்தது .இதனையடுத்து மரக்காணம் ஒன்றிய தலைவருக்கான தேர்தல் இன்று காலை 10 மணிக்கு அறிவிக்கப்பட்டது.
இதில் திமுகவின் கிழக்கு ஒன்றிய செயலாளராக தயாளனை ஒன்றிய குழுத் தலைவராக திமுக தலைமை அறிவித்துள்ளது. ஆனால் இதனை எதிர்த்து மத்திய ஒன்றியக்குழு செயலாளரான நல்லூர் கண்ணன் போட்டியிடுவதாக அறிவித்தார். அதிமுக மற்றும் சுயேட்சைகள் ஆதரவோடு 14 மேற்பட்ட உறுப்பினர்களின் ஆதரவு அவருக்கு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தேர்தல் பொறுப்பாளரான அமைச்சர் மஸ்தான், திமுக அதிகாரபூர்வ வேட்பாளர் தயாளன் ஆகியோர் தேர்தல் நடைபெறும் மரக்காணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே அமைக்கப்பட்டுள்ள பந்தலில் அமர்ந்தனர். தேர்தலை முன்னிட்டு போலீசார் குவிக்கப்பட்டனர். திமுகவில் குழப்பம் விளைவிக்க அதிமுக முயற்சிக்கிறது.இது முடியாது.திமுக தலைமையை மீறி செயல்படுவர்கள் மீது நடவடிக்கை சில மணிநேரங்களில் பாயும். அவர் அதிமுகவுடன் கைக்கோர்த்து போனால் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என அப்போது அமைச்சர் மஸ்தான் எச்சரித்தார்.
Also read : நெருங்கும் தீபாவளி... கடுமையாகும் கொரோனா கட்டுப்பாடுகள்? முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
அப்போது அமைச்சர் மஸ்தான் மற்றும் நிர்வாகிகளுக்கு கற்புரம் காட்டி தேங்காய் உடைத்து திருஷ்டி சுற்றி போடப்பட்டது. திமுக வெற்றிக்கு பிறகு உடைக்க திருஷ்டி பூசணிக்காய்யும் கொண்டு வரப்பட்டது .இதனிடையே மரக்காணம் ஒன்றிய அலுவலகம் எதிரே திடீர் பரபரப்பு ஏற்பட்டது. 200 மீட்டர் தாண்டி நிற்க வைக்கப்பட்டுள்ள திமுகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதிகாரப்பூர்வ வேட்பாளர் தயாளன் குழுவினருக்கும் நெல்லுர் கண்ணன் குழுவினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் நெல்லூர் கண்ணன் தரப்பினர் வேனில் ஏறி போலீஸ் பாதுகாப்புடன் ஒன்றிய அலுவலகம் வர முயற்சித்தனர். அப்போது தயாளன் மற்றும் அவரது ஆதரவு திமுகவினர் எதிரான கோஷம் எழுப்பி வேனை மறிக்க பதற்றம் ஏற்பட்டது.இரு தரப்பினரையும் போலீசார் சமாதானப்படுத்தினார்கள். இந்த நிலையில் தேர்தல் 10.35 மணிக்கு தள்ளி வைக்கப்பட்டதாக ஒலிபெருக்கில் அறிவிக்கப்பட்டது. குறைவான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் வந்ததால் தேதி குறிப்பிடாமல் தேர்தலை ஒத்திவைப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர் சரவணன் அறிவித்தார்.
மாநில தேர்தல் ஆணையம் கூறிய அரை மணி நேரம் கூடுதலாக கொடுத்தும் போதிய உறுப்பினர்கள் வரவில்லை.இதனால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்கும் தேதியில் தேர்தல் நடத்தப்படும் என மரக்காணம் ஊராட்சி ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலர் சரவணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதனை கண்டித்துகிழக்கு கடற்கரை சாலையில் மறியல் போராட்டம் நடந்தது. மரக்காணம் ஒன்றிய தலைவர் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அமைச்சர் மஸ்தானை கண்டித்தும் நெல்லூர் கண்ணன் ஆதரவாளர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அரை கி.மீ தூரத்திற்கு வாகனகள் நின்றதால் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local Body Election 2021