வாகன சோதனை செய்த காவலரின் செல்போனை பறித்து தாக்க முற்பட்ட தி.மு.க-வினர்.. போலீசார் விசாரணை

போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் திமுகவினர்

இரு சக்கர வாகனத்தில் வந்த தி.மு.க-வை சேர்ந்த வாசு என்பவரை காவலர்கள் நிறுத்தி விசாரனை செய்தனர்.

  • Share this:
சென்னை அயனாவரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் அவருடன் இருந்த போலீசார்கள் முழு ஊரடங்கு நேரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த தி.மு.க-வை சேர்ந்த வாசு என்பவரை காவலர்கள் நிறுத்தி விசாரனை செய்தனர். உடனே வாசு செல்போன் மூலம் மேலும் இருவரை உதவிக்கு அழைத்ததில் அந்த இடத்திற்கு தி.மு.க வடசென்னை வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் மகேஷ் மற்றும் தமிழ்செல்வன் வந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உதவி ஆய்வாளர் முருகன் சேரில் அமர்ந்து இருந்ததால் தி.மு.க-வைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் இளைஞரணி தலைவர் முன்பு சேரில் உட்கார்ந்து கொண்டே பேசுகிறாயா என கோவமாக பேசியுள்ளார்.

Also Read: திருமண கொண்டாட்டத்தில் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்திய மணமகள் : போலீசாரிடம் சிக்கிய சோகம்!

அப்போது அந்த வழியாக வந்த ICF காவலர் அசோக் அதை வீடியோவாக பதிவு செய்துள்ளார். இதில் கோபமடைந்த தமிழ் செல்வன் என்பவர் அசிங்கமான வார்த்தைகளால் பேசி காவலர் அசோகின் செல்போனை பறித்துள்ளார். மேலும் காவலரை அடிக்கவும் முற்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து ஐ.சி.எஃப் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published: