பம்மல் பகுதியில் திமுக பிரமுகர் வெட்டி படுகொலை: காவல்துறையினர் குவிப்பு

பம்மல் பகுதியில் திமுக பிரமுகர் வெட்டி படுகொலை: காவல்துறையினர் குவிப்பு

மாதிரிப்படம்

பதற்றமான சூழல் நிலவியதால்,  நூற்றுக் கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.

  • Share this:
சென்னை பம்மல் பகுதியில் திமுக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் குரோம்பேட்டை மருத்துவமனையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால், அங்கு 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர்.

சென்னை பல்லாவரத்தை அடுத்த நாகல்கேணி ஈஸ்வரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (56). அவரது மனைவி முனியம்மா (50) கணேசன் பம்மல் நகர திமுக 21, வது வட்ட கழக துணைச் செயலாளர். நேற்று 8.30 மணி அளவில் அவர் வீட்டின் வாசலில் நின்று அவரது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த 2,மர்ம நபர்கள் வாகனத்தை விட்டு இறங்கி, பட்டாக்கத்தியால் கணேசனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த கணேசனை மீட்டு குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அப்பகுதி மக்கள் அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில், மருத்துவர்கள் கணேசனை பரிசோதித்து பார்த்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

பின்னர் இது குறித்து சங்கர் நகர் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர், இதனைத் தொடர்ந்து அங்கு, விரைந்து வந்த காவல்துறையினர், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க... பட்ஜெட் 2021 : அனைத்து துறை சார்ந்த அறிவிப்புகள் மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்!

இந்நிலையில், அங்கு பதற்றமான சூழல் நிலவியதால்,  நூற்றுக் கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Published by:Suresh V
First published: