மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.முக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்

மின் கட்டண உயர்வு குறித்து மு.க ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர்.

மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.முக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • Share this:
தி.மு.க மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தொடர்பாக மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திமுக மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று காணொலி காட்சி வாயிலாக நடைபெற உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் மின் கட்டண உயர்வு குறித்து ஆலோசிக்க உள்ளதாகவும், உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து போராட்டம் நடத்துவது பற்றி இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க...


Tamil Nadu 12th Result 2020 | கடந்த ஆண்டைவிட இந்தாண்டு தேர்ச்சி அதிகம்

அத்துடன், மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சென்னை மேற்கு மாவட்ட செயலாளருமான ஜெ. அன்பழகன் மறைவுக்கு பிறகு காலியாக இருக்கக் கூடிய அந்த மாவட்ட செயலாளர் பதவிக்கு யாரை நியமிப்பது என்றும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
First published: July 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading