மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்ற திமுக எம்.பி.க்களின் கூட்டம், அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை நடைபெறுகிறது. இதில், திமுக-வின் நாடாளுமன்ற குழுத் தலைவர் தேர்வுசெய்யப்பட உள்ளார்.
மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற்ற 39 தொகுதிகளில் திமுக கூட்டணி 38 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதில், திமுக மட்டும் 23 இடங்களில் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு அடுத்து 3-வது மிகப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில், திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுக எம்.பி.க்களின் கூட்டம், அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், திமுக நாடாளுமன்றக்குழு தலைவர் யார்? என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இதனிடையே, மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி, சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டத்தை நடத்த திமுக முடிவு செய்துள்ளது. இதில் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்று உரையாற்றுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்துப் பேசினர்.
இதன்படி, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் புதுவை நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் ஆகியோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள குறைகளை விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்க முடியவில்லை என்றாலும், இதற்கு காலம் பதில் சொல்லும் என்றார்.
அதேபோல், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன் மற்றும் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி ஆகியோர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர்.
இதனிடையே, மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்ற திமுக வேட்பாளர்கள், கருணாநிதி நினைவிடத்தில் தங்களது வெற்றிச் சான்றிதழ்களை வைத்து மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் எம்.பி.யான கனிமொழி, தனது தாயார் ராஜாத்தி அம்மாள் மற்றும் கணவருடன் வந்து மரியாதை செலுத்தினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூத்துக்குடி மக்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் என்றார்.
மேலும், டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கபாண்டியன், பூண்டி கலைவாணன், மயிலாடுதுறை ராமலிங்கம், ஜி.செல்வம் உள்ளிட்டோர் கருணாநிதி நினைவிடத்தில் தங்களது வெற்றிச்சான்றிதழ்களை வைத்து மரியாதை செலுத்தினர்.
Also see... கருணாநிதி கற்றுத்தந்த வழியில் உழைத்துப் பெற்ற வெற்றி: ஸ்டாலின்
Also see...
தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Anna Arivalayam, DMK, Dmk leader stalin, Lok Sabha Election 2019