முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மு.க.ஸ்டாலின் எனும் நான்... ட்விட்டரில் ட்ரெண்டிங்!

மு.க.ஸ்டாலின் எனும் நான்... ட்விட்டரில் ட்ரெண்டிங்!

முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலை வகித்து வரும் நிலையில் திரைபிரபலங்கள் பலரும் அதை வரவேற்றுள்ளனர்.

  • Last Updated :

ஏப்ரல் 6-ம் தேதி தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. திமுக 173 தொகுதிகளில் நேரடியாக களம் கண்டது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் திராவிட முன்னேற்ற கழகம் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் என்று சொல்லப்பட்டிருந்தது.

இந்நிலையில் நாடே எதிர்பார்த்துக் காத்திருந்த வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி 151 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதேபோல் அதிமுக கூட்டணி 82 இடங்களிலும், மக்கள் நீதி மய்யம் கோவை தெற்கு தொகுதியிலும் முன்னிலை வகிக்கிறது.

திமுக ஆட்சியமைக்கத் தேவையான இடங்களைத் தாண்டி அதிகமான தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதால் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ட்விட்டரில் #முகஸ்டாலின்எனும்நான் என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

அதேவேளையில் திரைத்துறையினர் பலரும் திமுக வெற்றி பெற்றிருப்பதற்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்து வருகின்றனர். நடிகர் சித்தார்த் பிரதமர் மோடியை விமர்சித்து எழுதியுள்ளார்.

First published:

Tags: MK Stalin, TN Assembly Election 2021