Home /News /tamil-nadu /

ஆளுங்கட்சியான பின்னரும் எதிர்க்கட்சி வரிசையில் இடம் தேடியவர் - யார் இந்த வேதரத்தினம்..?

ஆளுங்கட்சியான பின்னரும் எதிர்க்கட்சி வரிசையில் இடம் தேடியவர் - யார் இந்த வேதரத்தினம்..?

வேதரத்தினம்

வேதரத்தினம்

பா.ஜ.க.,வில் இருந்து விலகிய முன்னாள் எம்.எல்.ஏ., எஸ்.கே.வேதரத்தினம் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தவர்களை மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக வரவேற்றார்.

பாஜகவில் மாநிலச் செயலாளராகப் பொறுப்பு வகித்துவந்தவரும், நாகை மாவட்டம், வேதாரண்யம் சட்ட மன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினருமான எஸ்.கே. வேதரத்தினம் பாஜகவிலிருந்து விலகி மீண்டும் திமுகவில் இணைந்துள்ளார்.

இவர் வேதாரண்யம் தொகுதியில் தொடர்ந்து 4 முறை திமுகவின் ஒன்றியச் செயலாளராக இருந்தவர். திமுக சார்பில் 1996, 2001, 2006 ஆகிய சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்று தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தார்.

நான்காவது முறையாக 2011 சட்டமன்ற தேர்தலில் திமுகவில் சீட்டு மறுக்கப்பட்டதை அடுத்து தி.மு.க.வில் இருந்து விலகி சுயேட்சையாக போட்டியிட்டு 2-வது இடம் பிடித்து வெற்றி வாய்ப்பை இழந்தார்.

திமுகவில் இருந்து விலகியவர், 2015-ம் ஆண்டு பாஜகவில் இணைந்து 2016 இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

இந்த தேர்தலில் வேதரத்தினம் சொந்த ஊரான தேத்தாக்குடியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரசார கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று இவருக்காக வாக்கு கேட்டுள்ளார்.

இதனிடையே தொடர்ந்து வேதரத்தினம் பாஜகவில் மாநிலச் செயலாளராகப் பொறுப்பு வகித்த இந்த நிலையில், சமீபத்தில் பாஜகவின் புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் அவருக்கு கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கிடைக்கும் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்த நிலையில் அவர் தேசிய பொதுக்குழு உறுப்பினராக அறிவிக்கப்பட்டார்.

இதனால் அதிருப்தி அடைந்த வேதரத்தினம் தனது ஆதரவாளர்களுடன் பேசி மீண்டும் திமுகவில் இணைவது என முடிவெடுத்து திமுகவில் வேதாரண்யம் நகர திமுக அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று மாலை தன்னை மீண்டும் இணைத்துக்கொண்டார்.

அதனையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின், கடந்த பத்து ஆண்டுகளாக அ.தி.மு.க ஆட்சியில் எல்லா வகையிலும் பின்தங்கிவிட்ட தமிழகத்தைக் மீட்டு, தி.மு.க ஆட்சியை உருவாக்க தேர்தல் களத்தில் இறங்கிப் பணியாற்ற வந்திருப்போரை வரவேற்கிறேன் என்று காணெலி வாயிலாக வரவேற்றார்.




படிக்க: மார்ச் மாதத்தைவிட ஜூன் மாதத்தில் மும்மடங்காக அதிகரித்துள்ள மின்கட்டணம்- காரணம் என்ன?

படிக்க: செல்ல மகனிடம் அன்பை பொழியும் நடிகை ஏமி ஜாக்சன் - கியூட் புகைப்படங்கள்

படிக்க: த்ரிஷாவுடன் திருமணமா? நடிகர் சிம்பு தரப்பு விளக்கம்








வேதரத்தினத்தை பற்றிய சுவாரஸ்ய சம்பவம் ஒன்று உள்ளது. 2006ல் திமுக வெற்றி பெற்றதும் சட்டசபை முதல் கூட்டத்திற்கு வந்த அவர் பழையபடி எதிர்க்கட்சி வரிசையில் தனது இடத்தை தேடி வந்தார். அங்கிருந்த எம்எல்ஏ, நீங்கள் இப்போது ஆளுங்கட்சி எதிர் வரிசையில் அமர வேண்டும் என்று அனுப்பி வைத்தார். இதனை அடுத்து சபையில் சிரிப்பொலி எழுந்தது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: BJP, DMK

அடுத்த செய்தி