சட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் மிகப்பெரிய போராட்டம் - பேரணியில் ஸ்டாலின் பேச்சு

சட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் மிகப்பெரிய போராட்டம் - பேரணியில் ஸ்டாலின் பேச்சு
திமுக தலைவர் ஸ்டாலின் உடன் பா.சிதம்பரம், கீ.வீரமணி மற்றும் கே.எஸ் அழகிரி
  • News18
  • Last Updated: December 23, 2019, 11:55 AM IST
  • Share this:
மத்திய அரசு இந்த CAA & NRC சட்டத்தை திரும்ப பெறாவிட்டால், அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரையும் ஒன்று கூட்டி மிகப்பெரும் போராட்டம் நடத்துவோம் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் CAA & NRC-க்கு எதிராக திமுக தலைமையிலான பேரணி தற்போது நடைபெற்றது. இதில் திமுகவின் தோழமை கட்சிகள் உடபட 90-க்கும் மேற்பட்ட அமைப்புகள் பங்கேற்றனர்.

எழும்பூரில் தொடங்கிய பேரணி ராஜரத்தினம் மைதானம் வரை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பல்லாயிரக்கணக்கானோர் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
பேரணியின் நிறைவாக பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் ஒன்றாய் வாழும் இந்தியரை திட்டம் போட்டு பிரிக்க முயற்சி நடப்பதாக தெரிவித்தார்.

மேலும், தோழமை கட்சிகள், பல்வேறு அமைப்புகளின் ஒத்துழைப்புடன் பேரணி சிறப்பாக நடந்துள்ளது என்று தெரிவித்த ஸ்டாலின் இது பேரணி அல்ல. போரணி என்று கூறினார்.Also see... CAA-க்கு எதிரான பேரணி... பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

தொடர்ந்து பேசிய ஸ்டாலின் மத்திய அரசு இந்த சட்டத்தை திரும்ப பெறா விட்டால், அரசியலுக்கு அப்பாற்பட்ட அனைவரையும் ஒன்று கூட்டி மிகப்பெரும் போராட்டம் நடத்துவோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Also see...
First published: December 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading