இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு மரண அடி கொடுக்கப்படும்: ஸ்டாலின் உறுதி!
தமிழகத்தில் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருவதாக கூறிய ஸ்டாலின், முதலமைச்சர் சொன்னதுபோல முதலீடுகள் வரவில்லை என்றும் விமர்சித்தார்.

முக ஸ்டாலின்
- News18
- Last Updated: October 19, 2019, 6:16 PM IST
இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு மரண அடி கொடுக்க உள்ளதாக, திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
விக்கிரவாண்டியில் உள்ள அசோகபுரியில் பரப்புரை மேற்கொண்ட ஸ்டாலின், அதிமுகவினர் ஆட்சியை காப்பாற்ற நினைக்கிறார்களே தவிர மக்களை காப்பாற்ற நினைக்கவில்லை என்று சாடினார்.
தமிழகத்தில் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருவதாக கூறிய ஸ்டாலின், முதலமைச்சர் சொன்னதுபோல முதலீடுகள் வரவில்லை என்றும் விமர்சித்தார். திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை நினைத்தால் தனக்கே ஆச்சர்யமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சற்றுமுன்பு முண்டியம்பாக்கம் பகுதியில் இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொண்ட மு.க.ஸ்டாலின், குட்கா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனை தடுப்பதில் அரசு மெத்தனம் காட்டுவதாக குற்றம் சாட்டினார்.
Also see...