• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மின்கட்டணத்தில் ஏற்பட்ட குளறுபடிகளை கண்டித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கருப்புச்சட்டை அணிந்து போராட்டம்..

மின்கட்டணத்தில் ஏற்பட்ட குளறுபடிகளை கண்டித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கருப்புச்சட்டை அணிந்து போராட்டம்..

மின் கட்டணத்தில் ஏற்பட்ட குளறுபடிகளை கண்டித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் கருப்பு சட்டை அணிந்து கருப்புக் கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.

  • Share this:
மின் கட்டணத்தில் ஏற்பட்ட குளறுபடிகளை கண்டித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கருப்பு சட்டை அணிந்து கருப்புக் கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.

கடந்த சில வாரங்களாகவே தமிழகம் முழுவதும் பரவலாக கொரோனாவுக்கு அடுத்தபடியாக பேசப்பட்ட விஷயம் மின்கட்டணம் உயர்வு, தமிழகத்தில் பொது மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த மின் கட்டண உயர்வு அனைத்து தரப்பு மக்களையும் பாதித்திருக்கும் நிலையை கண்டித்தும், மின்கட்டணத்தில் சலுகை அளிக்க வேண்டும் மற்றும் ரீடிங் எடுப்பதில் ஏற்படும் குளறுபடியை சரிசெய்ய வேண்டும் என்பதனை வலியுறுத்தி திமுக சார்பில் தமிழகமெங்கும் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் கருப்பு சட்டை அணிந்து கையில் கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது தமிழக அரசுக்கு எதிராகவும் தமிழக மின்வாரியம் துறையை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினார்.

இதேபோன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலும், சென்னை சிஐடி காலனியில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் தலைமையிலும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து முகக்கவசம் அணிந்து திமுக தொண்டர்கள் பங்கேற்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: