திமுகவின் உயர்நிலை செயல்திட்டக்குழு இன்று கூடுகிறது.. தேர்தல் கூட்டணி, தேர்தல் அறிக்கை குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்பு..
திமுகவின் உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. தேர்தல் வியூகம், பிரச்சாரப் பணி குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
- News18 Tamil
- Last Updated: November 23, 2020, 8:06 AM IST
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' எனும் தலைப்பில் திமுக தேர்தல் பரப்புரை செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த சூழலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறுகிறது. இதில், உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல் பணி குறித்தும், தேர்தல் கூட்டணி, பிரச்சார வியூகம் மற்றும் தேர்தல் அறிக்கை பற்றியும் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க.. Cyclone Nivar | காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளது. அடுத்த 24 மணிநேரத்தில் புயலாக வலுப்பெறும்.. உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் கூட்டப்படுவது சம்பந்தமாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதில், ”திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் வருகிற நவம்பர் 23 (திங்கட்கிழமை) காலை 10 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறும். அதில் உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்”இவ்வாறு துரைமுருகன் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல் பணி குறித்தும், தேர்தல் கூட்டணி, பிரச்சார வியூகம் மற்றும் தேர்தல் அறிக்கை பற்றியும் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க.. Cyclone Nivar | காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளது. அடுத்த 24 மணிநேரத்தில் புயலாக வலுப்பெறும்..