• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மக்கள் கிராம சபை கூட்டத்தை மோடி நினைத்தாலும் தடுக்க முடியாது - மு.க.ஸ்டாலின் சூளுரை

மக்கள் கிராம சபை கூட்டத்தை மோடி நினைத்தாலும் தடுக்க முடியாது - மு.க.ஸ்டாலின் சூளுரை

 திமுக தலைவர் ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின்

திமுகவின் கிராமசபை கூட்டத்தை பார்த்து முதல்வர் தூக்கமிழந்து தவிப்பதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    மக்கள் கிராம சபை கூட்டத்தை மோடி நினைத்தாலும் தடுக்க முடியாது என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்துள்ளார்.

    'அதிமுகவை நிராகரிப்போம்' என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் கிராமசபை கூட்டம் என்ற பெயரில் திமுக கூட்டம் நடத்தி வருகிறது. இந்நிலையில் தனிநபரோ, அரசியல் கட்சியோ கிராம சபை கூட்டத்தை கூட்டினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்தது.

    அதனை அடுத்து, மக்கள் கிராம சபை என்ற பெயரில் கூட்டம் நடத்தப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இன்று மரக்காணத்தில் நடந்துவரும் கூட்டத்தில், ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.

    கூட்டத்தின் தொடக்கத்தில் பேசிய ஸ்டாலின், திமுகவின் கிராமசபை கூட்டத்தை பார்த்து முதல்வர் தூக்கமிழந்து தவிப்பதாக கூறினார். பயத்தால் பெயரை மாற்றவில்லை என்ற ஸ்டாலின், கூட்டம் நடத்தப்பட வேண்டுமென்பதற்காகவே பெயர் மாற்றப்பட்டிருப்பதாக விளக்கம் அளித்தார். யார் தடுத்தாலும், கூட்டத்தை நடத்துவோம் என்றும் அவர் சூளுரைத்தார்.

    Also read... எம்ஜிஆரை உரிமை கொண்டாடுபவர்கள் அவருக்காக என்ன செய்திருக்கிறார்கள் - தேமுதிக பொருளாளர் பிரேமலதா கேள்வி

    தொடர்ந்து மரக்காணத்தைச் சேர்ந்த விவசாயிகள், மீனவர்கள், உப்பள தொழிலாளர்களிடம், ஸ்டாலின் குறைகளை கேட்டறிந்தார். அதனை அடுத்து அதிமுகவை நிராகரிப்போம் என்ற தீர்மானத்தில் ஸ்டாலின் கையெழுத்திட, குரல் வாக்கெடுப்பில் அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து, அதிமுக மீதான 10 குற்றச்சாட்டுகள் அடங்கிய துண்டறிக்கையை வீடு வீடாக சென்று வழங்கினார்.

    அதிமுக பயந்துவிட்டதாலேயே, கிராம சபை கூட்டத்திற்கு தடைபோடுவதாக, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார். வேலூர் மாவட்டம், பொன்னை ஆற்றில் வெள்ள பெருக்கால் சேதமடைந்த மேம்பாலத்தை சீர் செய்யும் பணியினை துரைமுருகன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கிராம சபை கூட்டம் என்கின்ற வார்த்தையை, யாரும் பயன்படுத்தக்கூடாது என்று, எந்த சட்டமும் இல்லையென தெரிவித்தார்.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: