அந்த இரு அமைச்சர்களின் துறைக்கு மட்டும் கூடுதல் நிதி ஒதுக்கீடு ஏன்...? ஸ்டாலின் எழுப்பிய கேள்விகள்

TN Budget |

அந்த இரு அமைச்சர்களின் துறைக்கு மட்டும் கூடுதல் நிதி ஒதுக்கீடு ஏன்...? ஸ்டாலின் எழுப்பிய கேள்விகள்
மு.க ஸ்டாலின்
  • News18
  • Last Updated: February 14, 2020, 2:57 PM IST
  • Share this:
தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள 11 பேரில் ஒருவரான பன்னீர்செல்வம் நிதி அறிக்கையை வாசித்துள்ளார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

மத்திய அரசை இந்த ஆட்சி பின்பற்றுவது என்பதற்கு அவர் எடுத்துக் கொண்ட நேரமே எடுத்துக் காட்டு

ஜெயலலிதா மறைந்த பிறகு தியானம் செய்து இந்த ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்று சொன்னவர் தான் இன்று மாறி உள்ளார். தவிர வேறு எதுவும் மாறவில்லை. பன்னீர்செல்வம் படித்த பத்தாவது பட்ஜெட் யாருக்கும் பத்தாத பட்ஜெட் என்றும் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.


ஒவ்வொரு ஆண்டும் கடன் சுமை அதிகரிக்கிறது.
ஒவ்வொருவரின் தலையிலும் 57,000 ரூபாய் கடன் சுமத்தப்படுகிறது என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், திமுக ஆட்சியில் 1 லட்சம் கோடியாக இருந்த கடன் சுமை தற்போது நான்கு லட்சத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. இந்த நிதிநிலை அறிக்கையில் வளர்ச்சி, தொலைநோக்கு திட்டம், என எதுவும் இல்லை என்றும் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வேலுமணி, தங்கமணி ஆகியோர் துறைகளுக்கு மட்டும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இது புரியவில்லை என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் வேண்டும் என்பதில் உடன் படுகிறோம். இதை எப்படி நிறைவேற்ற போகிறார்கள் என்பது தெரியவில்லை என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

11 எம்.எல். ஏக்கள விவகாரத்தில் சபாநாயகர் உரிய முடிவு எடுத்து அறிவிப்பார். நல்ல அறிவிப்பாக கூட இருக்கலாம். 2 நாட்களுக்கு முன்பு மத்திய அரசிடம் ஜெயக்குமார் ஒரு கடிதத்தை வழங்கியிருக்கிறார். அந்த கடிதம் தொடர்பாக விளக்கமளிக்கவில்லையென்றால் நாங்கள் வெளியிடுவோம் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Also see...
First published: February 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்