4 தொகுதி இடைத்தேர்தல் பொறுப்பாளர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை!

ஸ்டாலின்

மே 19-ம் தேதி 4 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், சூலூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பொறுப்பாளர்களுடன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

திருப்பரங்குன்றம் மற்றும் ஓட்டப்பிடாரம் தொகுதி பொறுப்பாளர்களுடன் காலை 10:30 மணி முதல் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மாலை, சூலூர் மற்றும் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனையில்பொருளாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்எஸ்பாரதி, கனிமொழி, 4 தொகுதிகளுக்கான மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

பூத் கமிட்டி அமைப்பது, உள்ளூர் நிர்வாகிகளுடன் இணைந்து பணியாற்றுவது உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

வரும் மே 19-ம் தேதி அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.

இதற்கான இடைத்தேர்தல் பிரசாரத்தை மு.க.ஸ்டாலின், வரும் ஒன்றாம் தேதி தொடங்க உள்ளார். இது குறித்து திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஓட்டப்பிடாரம் தொகுதியில் வரும் ஒன்று மற்றும் 2-ம் தேதியும், திருப்பரங்குன்றம் தொகுதியில் 3 மற்றும் 4-ம் தேதியும் பிரசாரம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூலூர் தொகுதியில் 5 மற்றும் 6-ம் தேதியும், அரவக்குறிச்சியில், 7 மற்றும் 8-ம் தேதியும் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிக்க உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also see... அவர்களை ஏமாற்றமாட்டேன் - ரஜினிகாந்த் மகிழ்ச்சி பேட்டி


Also see... Photos | உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்ட புனித வெள்ளி!

Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.Published by:Vaijayanthi S
First published: