அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் என்.ஐ.ஏவால் கைது! ஸ்டாலின் கண்டனம்
அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் என்.ஐ.ஏவால் கைது! ஸ்டாலின் கண்டனம்
மு.க.ஸ்டாலின்
தேசியப் புலனாய்வு முகமை, அரசியலுக்காக பயன்படுத்தப்படுவது தொடர்ந்தால் நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்பிக்கள் குரல் கொடுப்பார்கள் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழகத்தில் பா.ஜ.க காலூன்றும் முயற்சிக்காக அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் என்.ஐ.ஏவால் கைது செய்யப்படுவதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை. சி.பி.ஐ போன்று, தேசிய புலனாய்வு முகமையையும், பா.ஜ.க. அரசு தனது அரசியல் லாபத்திற்கு பயன்படுத்துவதாக சாடியுள்ளார்.
சிறுபான்மை சமுதாயத்தினரை ஒட்டு மொத்தமாய் பயங்கரவாதிகளாகச் சித்தரிப்பதன் மூலம் பா.ஜ.க.வை விதைக்கலாம் என்ற நோக்கில், தமிழகத்தில் தேசிய புலனாய்வு முகமை பயன்படுத்தப்படுவதாகவும் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.
மாநில அரசுக்கே தெரியாமல் என்.ஐ.ஏ கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவது மத்திய அரசுக்கு அழகல்ல என்று கூறியுள்ள மு.க.ஸ்டாலின், அதனை அ.தி.மு.க அரசு அமைதியாக வேடிக்கை பார்ப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் அரசியல் உள்நோக்கத்தோடு என்.ஐ.ஏ பயன்படுத்தபடுவதை, மத்திய அரசுக்கு தீவிர அழுத்தும் கொடுத்து அ.தி.மு.க அரசு தடுக்கவேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தேசியப் புலனாய்வு முகமை, அரசியலுக்காக பயன்படுத்தப்படுவது தொடர்ந்தால் நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்பிக்கள் குரல் கொடுப்பார்கள் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
Also see...
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.