Home /News /tamil-nadu /

தருமபுரி பேருந்து எரிப்பு குற்றவாளிகள் விடுதலை - ஸ்டாலின் கேள்வி

தருமபுரி பேருந்து எரிப்பு குற்றவாளிகள் விடுதலை - ஸ்டாலின் கேள்வி

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவத்தில் 3 மாணவிகள் கொல்லப்பட்ட வழக்கில் தண்டிக்கப்பட்ட மூன்று அதிமுகவினர் நேற்று சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

  • News18
  • Last Updated :
தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை குற்றவாளிகளான அதிமுகவினரை விடுதலை செய்துள்ள அரசு, 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்யாதது ஏன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தர்மபுரி பேருந்து எரிக்கப்பட்ட வழக்கு குற்றவாளிகள் நேற்று சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர். இவ்விவகாரத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அரசுக்கு பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அரசியல் சாசனத்தின் 161வது பிரிவை பயன்படுத்தி அதிமுக பிரமுகர்கள் மாது, நெடுஞ்செழியன், முனியப்பன் விடுதலை செய்யப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டியுள்ள மு.க.ஸ்டாலின், அதேநேரம் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய உத்தரவிடாமல் ஆளுநர் தாமதித்து வருவதாக கூறியுள்ளார்.

அதிமுகவின் அரசின் இந்த செயல் ஓரவஞ்சனையானது என மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஏழு பேரையும் விடுவிப்பதற்கான உத்தரவில் கையெழுத்திடுங்கள் என ஆளுநரிடம் சொல்ல எடப்பாடி பழனிசாமி அரசுக்கு துணிச்சல் இல்லையா? அல்லது மனம் இல்லையா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விவகாரத்தில் ஏனோதானோ என்று பட்டும் படாமல் அரசு நடந்து கொள்வதாகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

Also see...

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Dharmapuri bus burnt, MK Stalin

அடுத்த செய்தி