’தேர்ச்சி எனக் கூறி மாணவர்களை முதல்வர் ஏமாற்றிவிட்டார்..’ மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு..

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ன நடைபெறுகிறது என்றே உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு தெரியவில்லை என குற்றம் சாடியுள்ளார்.

 • Share this:
  தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட கலை, அறிவியல் கல்லூரி அரியர் மாணவர்கள், அரசு கல்லூரிகளில் முதுகலை படிப்பில் சேர அனுமதி மறுக்கப்படுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.

  சட்டப்பேரவை தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும் திமுக சார்பில் "தமிழகம் மீட்போம்" என்ற பெயரில் பொதுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் தருமபுரியில் நடைபெற்ற கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பங்கேற்றார்.

  அப்போது பேசிய அவர், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ன நடைபெறுகிறது என்றே உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு தெரியவில்லை என குற்றம்சாட்டினார்.

  மேலும் படிக்க.. திமுக-வை போலவே 234 தொகுதியிலும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியும் சர்வே எடுத்துள்ளோம்.. கார்த்திக் சிதம்பரம்..  தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழக கல்லூரிகளில் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் துணைவேந்தர்களாக நியமிக்கப்படுவதற்கு அதிமுக அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

  மேலும் அரியர் மாணவர்களை தேர்ச்சி எனக்கூறி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏமாற்றிவிட்டார் என்றும் சாடியுள்ளார்.  காரணம் அவர்களுக்கு முதுகலை படிப்பில் சேர அனுமதி மறுக்கப்படுவதாக தெரிவித்தார்.
  Published by:Vaijayanthi S
  First published: