வேலுாரில் தேர்தல் ரத்தானது ஜனநாயகப் படுகொலை - மு.க ஸ்டாலின்

வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறித்து, தொலைபேசி மூலம் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், பணப்பட்டுவாடா தொடர்பான புகாருக்குள்ளான வேட்பாளரை தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டுமே தவிர, தேர்தலை ரத்து செய்திருக்க கூடாது என்று கூறினார்.

Web Desk | news18
Updated: April 17, 2019, 7:57 AM IST
வேலுாரில் தேர்தல் ரத்தானது ஜனநாயகப் படுகொலை - மு.க ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்
Web Desk | news18
Updated: April 17, 2019, 7:57 AM IST
தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். வேலுாரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது ஜனநாயப்படுகொலை என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

17-வது மக்களவை தேர்தலுக்கான 2-ம் கட்ட தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 3-ம் தேதி காட்பாடியில் உள்ள பூஞ்சோலை சீனிவாசன் என்பவரது வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது அவரது குடோனில் இருந்து கட்டு கட்டாக 11 கோடியே 54 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.  கைப்பற்றப்பட்ட பணத்துடன் வார்டு வாரியாக யாருக்கு விநியோகம் செய்ய வேண்டும் என்ற பட்டியலும் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து வருமானவரித்துறை கொடுத்த அறிக்கையின் அடிப்படையிலும், கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலும், வேலூரில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என குடியரசுத்தலைவருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது.

தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்படுவதாக குடியரசுத்தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில், வேலூரில் தேர்தலை நேர்மையாக நடத்துவதற்காக தேர்தல் ஆணையம் மேற்கொண்ட முயற்சிகள் செயலற்றதாகியுள்ள சூழ்நிலையில் அங்கு நியாயமான முறையில் தேர்தலை நடத்த முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் கடந்த மார்ச் 19 -ம் தேதி வெளியிடப்பட்ட மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பாணையிலிருந்து வேலூர் மக்களவைத் தொகுதியை நீக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் வேலூர் மக்களவைத் தொகுதிக்குள் வரும் ஆம்பூர், குடியாத்தம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் திட்டமிட்டப்படி நடைபெறும் என நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரபா சாகு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பது ஜனநாயக படுகொலை என்று கூறியுள்ளார்

இதேபோல் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், இது தேர்தல் ஆணையத்தின் ஒரு தலைபட்சமான நடவடிக்கை என்று குற்றம் சாட்டியுள்ளார்

அமைச்சர் ஜெயக்குமார்

வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறித்து, தொலைபேசி மூலம் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், பணப்பட்டுவாடா தொடர்பான புகாருக்குள்ளான வேட்பாளரை தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டுமே தவிர, தேர்தலை ரத்து செய்திருக்க கூடாது என்று கூறினார்.

தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்

இந்நிலையில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது தொடர்பான அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என திமுக வேட்பாளர்  கதிர் ஆனந்த், தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில், தனக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட  வருமானவரி சோதனையில் பணம் கைப்பற்றப்படவில்லை என்றும், எனவே கைப்பற்றப்பட்டுள்ள பணத்திற்கும் தனக்கும் தொடர்பில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே தனக்கும் திமுகவிற்கும் அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற அரசியல் நோக்கத்திலேயே இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கும் விரோதமானது என்றும் கதிர் ஆனந்த் கூறியுள்ளார்.

எனவே தேர்தல் ரத்து செய்யப்பட்டது தொடர்பான அறிவிப்பாணையை திரும்ப பெற்றுக்கொண்டு ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி தேர்தல் நடத்த  வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Also see... கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து TikTok-செயலி நீக்கம்  

வருமான வரித்துறை சோதனை ஏன்? கனிமொழி விளக்கம்  

Also see... வேலூரில் தேர்தலை நியாயமான முறையில் நடத்த முடியாத சூழல் நிலவுகிறது- தேர்தல் ஆணையம்

Also see... 




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: April 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...