முகப்பு /செய்தி /தமிழ்நாடு / உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் வெற்றியை தடுக்க அதிமுக சதி...! ஸ்டாலின் குற்றச்சாட்டு

உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் வெற்றியை தடுக்க அதிமுக சதி...! ஸ்டாலின் குற்றச்சாட்டு

மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமியை ஸ்டாலின் சந்தித்த போது

மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமியை ஸ்டாலின் சந்தித்த போது

  • Last Updated :

உள்ளாட்சித் தேர்தலில் 80 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் திமுக முன்னணியில் இருந்தும், அதிகாரிகளின் துணையுடன் வெற்றியைத் தடுக்க அதிமுக சதி செய்வதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை நியாயமான முறையில் நடத்தி முடிவுகளை உடனே அறிவிக்கக்கோரி மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமியை சென்னை கோயம்பேடு ஆணையத்தில் சந்தித்து திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

தேர்தல் ஆணையர் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், சேலம், திண்டுக்கல், தேனி, திருவண்ணாமலை, தூத்துக்குடி உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் 80 சதவீதத்துக்கும் மேலான இடங்களில் திமுக வேட்பாளர்கள் முன்னணியில் இருந்தும், அதிகாரிகளின் துணையுடன் திமுகவின் வெற்றியைத் தடுக்க அதிமுக முயல்வதாக குற்றம் சாட்டினார்.

மேலும், ஆளும் கட்சிக்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாக ஆணையம் செயல்படாமல் திமுக வேட்பாளர்களின் வெற்றியை விரைந்து அறிவிக்க வேண்டும் என்று ஆணையர் பழனிசாமியிடம் வலியுறுத்தியதாகவும், திமுகவின் கோரிக்கை மீது அரைமணி நேரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆணையர் உறுதி அளித்துள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

Also see...

top videos

    First published:

    Tags: Local Body Election 2019, MK Stalin