CAA-வுக்கு எதிராக கட்சிக்காரர்கள் வீடுகளில் கோலங்கள் போடப்படுகிறதா? நிர்வாகிகளிடம் விசாரித்த ஸ்டாலின்

CAA-வுக்கு எதிராக கட்சிக்காரர்கள் வீடுகளில் கோலங்கள் போடப்படுகிறதா? நிர்வாகிகளிடம் விசாரித்த ஸ்டாலின்
  • News18
  • Last Updated: December 30, 2019, 12:27 PM IST
  • Share this:
கட்சிக்காரர்களின் வீடுகளில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக கோலங்கள் போடப்படுகிறதா என திமுக மாவட்ட செயலாளர்களை தொலைபேசியில் அழைத்து திமுக தலைவர் ஸ்டாலின் விசாரித்துள்ளார்.

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக நேற்று சென்னையில் நடைபெற்ற கோலம் போடும் போராட்டம். இந்த போராட்டத்தின் முக்கிய அம்சமாக இடம் பெற்றது. ஏனென்றால் CAA-விற்கு எதிராக கோலம் போட்ட போராட்டக்காரர்களை போலீஸார் கைது செய்தனர். இந்நிகழ்வு சமூகவலைதளத்தில் டிரெண்ட் செய்யப்பட்டது.


இதனையடுத்து குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக இருக்கக்கூடிய அனைவரும் தங்கள் வீட்டில் வாசல்களிலும் கோலம் போட்டு எதிர்ப்பை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தனர்.

குறிப்பாக திமுகவின் தலைவர் ஸ்டாலின் மற்றும் கனிமொழி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் கோபாலபுரம் இல்லம் உள்ளிட்ட இடங்களில் கோலம் போடப்பட்டும் CAA-விற்கு எதிராக கண்டனங்கள் மூலம் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

கருணாநிதி மற்றும் ஸ்டாலின் வீடுகளில் போடப்பட்டுள்ள கோலம்
இதேபோல திமுகவின் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் கட்சிக்காரர்களின் வீடுகளில் கோலம் போட்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துவிட்டீர்களா? என்று ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களுக்கும் தொலைபேசி மூலமாக அழைத்து திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.

குறிப்பாக ஆவடி நாசர் அவர்களிடம் தொலைபேசியில் இதுகுறித்து கேட்டறிந்த  அவர், உள்ளாட்சி தேர்தல் எப்படி நடக்கிறது என்பது குறித்தும் விசாரித்துள்ளார்.

Also see...
First published: December 30, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்