ஜெயக்குமார் பேசிய வடிவேலு வசனத்தை வைத்தே பதிலடி கொடுத்த ஸ்டாலின்!

சட்டப்பேரவையில் " வரும்... ஆனா வராது" என்ற வடிவேலுவின் காமெடியை வைத்து பேசிய தலைவர்கள்.

Web Desk | news18
Updated: July 11, 2019, 1:14 PM IST
ஜெயக்குமார் பேசிய வடிவேலு வசனத்தை வைத்தே பதிலடி கொடுத்த ஸ்டாலின்!
ஸ்டாலின் மற்றும் ஜெயக்குமார்
Web Desk | news18
Updated: July 11, 2019, 1:14 PM IST
உலக முதலீட்டாளர் மாநாட்டில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழகத்தில் தொழில் முதலீடுகளாக வரும்... ஆனா வராது என எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் விமர்சித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று சமூக நலத்துறை மீதான மானிய கோரிக்கையில் பேசிய திமுக உறுப்பினர் சேகர்பாபு, சமூக நலத்துறைகளின் பல்வேறு திட்டங்கள் குறித்தும் அதில் உள்ள குறைபாடுகள் குறித்தும் பேசினார். இறுதியில் திட்டங்களில் உள்ள குறைகளை விரைவில் வரவுள்ள திமுக ஆட்சி பூர்த்தி செய்யும் என பேசினார்.

விரைவில் திமுக ஆட்சி என்ற திமுக உறுப்பினருக்கு வடிவேலு பாணியில் பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார்!

உடனடியாக குறுக்கிட்ட அமைச்சர் ஜெயக்குமார், நடிகர் வடிவேலின் காமெடி டயலாக்கான " வரும்... ஆனா வராது" என பதிலளித்தார். அப்போது அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

அதற்கு இன்று நடந்த சட்டப்பேரவை நிகழ்வில் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், உலக முதலீட்டாளர் மாநாட்டில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழகத்தில் தொழில் முதலீடுகளாக வரும்... ஆனா வராது என்று விமர்சித்தார்.

மேலும் படிக்க... வரி வசூல்: நிர்மலா சீதாராமனுக்கு திருக்குறளை சுட்டிக்காட்டிய ஆ ராசா

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...