மோடி இந்தியாவுக்கான பிரதமர் அல்ல? - மு.க.ஸ்டாலின்

பிரதமர் மோடி இந்தியாவுக்கான பிரதமர் அல்ல வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்யும் வெளிநாட்டு பிரதமர் என்றும் ஸ்டாலின் சாடினார்.

மோடி இந்தியாவுக்கான பிரதமர் அல்ல? - மு.க.ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின்
  • News18
  • Last Updated: April 7, 2019, 8:59 AM IST
  • Share this:
கொடுத்த வாக்குறுதிகளை பிரதமர் மோடி நிறைவேற்றாதவர் என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த இரும்பேடு கிராமத்தில், பிரசார பொதுக்கூட்டத்தில் திமுக கூட்டணி வேட்பாளர் விஷ்ணு பிரசாத்துக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் வாக்குக் கேட்டார்.

அப்போது பேசிய அவர், ‘‘கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதவர் பிரதமர் மோடி. திமுக காங்கிரஸ் கூட்டணி கொள்கை கூட்டணி. அதிமுக பாமக மற்றும் பாஜக கூட்டணி கொள்ளைக் கூட்டணி.  பிரதமர் மோடி இந்தியாவுக்கான பிரதமர் அல்ல, வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்யும் வெளிநாட்டு பிரதமர். அதிமுக ஓர் ஊழல் கட்சி’’ என்று பேசினார்.


முன்னதாக விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.

வன்னியர் சமுதாயத்திற்காக திமுக நிறைவேற்றிய திட்டங்களை பட்டியலிட்டார் ஸ்டாலின். எடப்பாடி பழனிசாமிக்காக ராமதாஸ் தமது மனசாட்சியை அடகு வைத்துவிட்டதாக விமர்சித்தார்.

வேட்பாளர் ரவிக்குமாருடன் விழுப்புரம் மார்கெட் பகுதி, உழவர் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் நடந்து சென்று போது மக்கள் மற்றும் வியாபாரிகளிடம் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது இளம்பெண்கள், பொது மக்கள் உள்ளிட்டோர்  ஸ்டாலினுடன் ஆர்வமாக செல்பியும் எடுத்துக்கொண்டனர்.Also see...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

ஐ.பி.எல் தகவல்கள்

POINTS TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:


SCHEDULE TIME TABLE:
First published: April 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading