Home /News /tamil-nadu /

கஜா புயல் பாதிப்பு: நாளை வேதாரண்யம் செல்கிறார் ஸ்டாலின்

கஜா புயல் பாதிப்பு: நாளை வேதாரண்யம் செல்கிறார் ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள நாகை, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட புயல் சேதங்களை  திமுக தலைவர் ஸ்டாலின் நாளை பார்வையிடுகிறார்.

  • News18
  • Last Updated :
கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள நாகை, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட புயல் சேதங்களை  திமுக தலைவர் ஸ்டாலின் நாளை பார்வையிடுகிறார்.

வேதாரண்யம் பகுதியில் கஜா புயல் காரணமாக மின் வசதி, சாலை வசதி, தொலைதொடர்பு அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளை விரைந்து செயல்படுத்த வேதாரண்யம் பகுதி மக்கள் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்கு திரும்பினாலும் இடிந்த வீடுகள், விழுந்த மரங்கள் மட்டுமே காட்சியளிக்கின்றன. வேதாரண்யத்தில் எந்தவித உதவியும் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். மேலும், உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றியும் ஆயிரக்கணக்கான மக்கள் அவதியில் உள்ளனர்.

இந்நிலையில் புயல் பாதித்த 12 மணி நேரத்திற்கு பிறகு வேதாரண்யத்தில் இருந்து முதல் காட்சியை நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டது.

இந்நிலையில்,  இன்று மாலை திருச்சி செல்லும் திமுக தலைவர் ஸ்டாலின், நாகை, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிளில் புயல் சேதங்களை  நாளை பார்வையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கஜா புயல் பாதிப்புகள் தொடர்பான செய்திகளை படிக்க, வீடியோக்களை காண, படங்களை பார்க்க கிளிக் செய்க

News18 Tamil App - செய்திகளை நியூஸ்18 தமிழ் ஆப் வழியாக உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்

Also see...

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Cyclone Gaja

அடுத்த செய்தி