ஓட்டுக்கு அதிமுகவினரிடம் ரூ.2,000 வாங்காதீங்க... ரூ.2 லட்சம் கேளுங்கள் - மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

எட்டுவழிச்சாலைத் திட்டத்தை நிறைவேற்றுவோம் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியதை விமர்சித்த மு.க.ஸ்டாலின், இந்த திட்டத்தை எதிர்க்கும் பாமக அந்த கூட்டணியில் இடம்பெற்று இருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் அதிமுகவினரிடம் வாக்காளர்கள் 2 லட்சம் ரூபாயாக கேட்க வேண்டும் என்றும், ஆனால், திமுக கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

  காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செல்வம், திருப்போரூர் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் இதயவர்மன் ஆகியோரை ஆதரித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மாம்பாக்கத்தில் பொதுமக்களிடையே பிரசாரம் செய்தார்.

  Also read... சிறப்பு முகாம்கள் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு பூத் சிலிப் வராததால் வாக்களிப்பதில் சிக்கல்!

  அப்போது பேசிய அவர், அதிமுக தற்போது ஓட்டுக்குப் பணம் வழங்கத் தொடங்கிவிட்டதாக குற்றஞ்சாட்டினார்.

  எட்டுவழிச்சாலைத் திட்டத்தை நிறைவேற்றுவோம் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியதை விமர்சித்த மு.க.ஸ்டாலின், இந்தத் திட்டத்தை எதிர்க்கும் பாமக அந்தக் கூட்டணியில் இடம்பெற்று இருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.

  Also see...


  தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.  Published by:Vinothini Aandisamy
  First published: