மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் மு.க.ஸ்டாலின்

மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் மு..கஸ்டாலின்

DMK Leader MK Stalin | போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு 11.20 மணிக்கு மு.க.ஸ்டாலின் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, ஆகியோருடன் சென்றார்.

 • Last Updated :
 • Share this:
  பொது மருத்துவ பரிசோதனை சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற நிலையில் பரிசோதனை முடிந்து நணபகல் 12.20 மணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு கிளம்பினார்.

  சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் இன்று காலை ஒன்பது முப்பது மணி அளவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நிகழ்ச்சியின் போது குறைந்த ரத்த அழுத்தத்தின் காரணமாக ஏற்பட்ட லேசான மயக்கம் காரணமாக சென்னை கொளத்தூர் 200 அடி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதற்கட்ட பரிசோதனை மேற்கொண்டார்.

  அதில் தூக்கமின்மை காரணமாக குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டு இருப்பதாகவும் அங்கு ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியைத் தொடர்ந்து அங்கிருந்து கிளம்பிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மேலதிக மருத்துவரின் ஆலோசனை மற்றும் பரிசோதனைக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு 11.20 மணிக்கு மு.க.ஸ்டாலின் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, ஆகியோருடன் சென்றார். அதன் பின் மருத்துவ பரிசோதனைகள் முடிந்து 12.20 மணிக்கு மருத்துவமனையில் இருந்து புறப்பட்டார்.

  திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரது மனைவி துர்கா ஸ்டாலின் மருமகன் சபரீசன், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ,ஜெகத்ரட்சகன் எம்.பி, சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா, காந்தி உள்ளிட்டோரும் உடல்நலம் குறித்து விசாரித்து சென்றனர்.

  முன்னதாக கொளத்தூரில் மருத்துவ பரிசோதனைக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,
  லேசான மயக்கம் மற்றும் உடல் சோர்வு இருந்தது. அதனால் அதனால் மருத்துவர்களின் அறிவுரைப்படி ரத்த அழுத்தத்தை பரிசோதனை(BP) செய்தோம், ஈசிஜி (ECG)பரிசோதனை செய்தோம் மற்றபடி ஏதும் இல்லை.எந்த பிரச்னையும் இல்லைா, மருத்துவர்கள் சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு புறப்பட சொன்னார்கள்“ என்றார்.
  Published by:Vijay R
  First published: