கூட்டணி விவகாரம் குறித்து பொது வெளியில் பேச வேண்டாம் - கட்சியினருக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்

கூட்டணி பற்றி பொது வெளியில் விவாதம் நடத்துவதை நான் சிறிதும் விரும்பவில்லை என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கூட்டணி விவகாரம் குறித்து பொது வெளியில் பேச வேண்டாம் - கட்சியினருக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்
மு.க.ஸ்டாலின்
  • News18
  • Last Updated: January 18, 2020, 2:35 PM IST
  • Share this:
கூட்டணி குறித்து பொது வெளியில் பேச வேண்டாம் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக திமுக - காங்கிரஸ் இடையிலான பிரச்னை குறித்து திமுக தலைவர் ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணியில் எந்த பிரச்னையும், பிளவும், கருத்துவேறுபாடும் கிடையாது என தெரிவித்தார்.


இதனிடையே கே.எஸ் அழகிரி சந்திப்பிற்கு பிறகு திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கூட்டணி பற்றி பொது வெளியில் விவாதம் நடத்துவதை நான் சிறிதும் விரும்பவில்லை. கூட்டணி குறித்த கருத்துக்களை பொதுவெளியில் தெரிவிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
First published: January 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்